முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு

திருவாரூர்,ஏப். 3: நாகை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். நாகை  மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தாழைசரவணன் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொகுதி முழுவதும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் சரவணனுக்கு ஆதரவாக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார். அதன்படி கள்ளிக்குடி, பாண்டி, வேப்பஞ்சேரி, குன்னலு£ர்,  கீழபெருமழை, மேலப்பெருமழை, விளாங்காடு,  கற்பகநாதர்குளம், இடும்பாவனம், தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை, கீழக்காடு, மேலநம்மகுறிச்சி, கீழநம்மகுறிச்சி, கோவிலூர், ஆலங்காடு, உப்பூர், உதயமார்த்தாண்டபுரம், பின்னத்தூர், தோலி, சங்கேந்தி, எடையூர், ஓவரூர், வங்கநகர், மருதவனம், மாங்குடி, கடுவெளி, வடசங்கேந்தி, ஆரியலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவும் வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் ஜெயபால், நாகை எம்பி கோபால், பாஜக மாவட்ட தலைவர் பேட்டைசிவா,  திருவாரூர் டி.சி.எம்.எப் முன்னாள் தலைவர் விஸ்வநாதன், அதிமுக முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: