வாலிகண்டபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா

பெரம்பலூர்,மார்ச்26: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ பால தண்டாயுத பாணி சுவாமியின் 31வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாலாம்பிகை சமேத வாலீ ஸ்வரர் கோயில், ஸ்ரீ பால தண்டா யுத பாணி சுவாமியின் 31வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா ஸ்ரீ பால தண்டாயுதபாணி கிருத்திகை வழிபாட்டு சேவா சங்கத்தின் சார்பாக நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றம், ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி மூல வர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  சுப்ரமணியர் சுவாமி சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் திருவீதியுலா, காவடி புறப்பாடு  மகா அபிஷேகம், மூல வருக்குக் கவசம் சார்த்துதல், சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலவர் தண்டாயுத பாணி சுவாமிக்கு சந்தனக் காப்பு அல ங்காரம், தீபாராதனை,  வள்ளி தேவசேனா உடனுறை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாலிக ண்டபுரம், பிரம்மதேசம், விஆர்எஸ்எஸ்பு ரம், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, தேவையூர், தம்பை, சிறுகுடல் பகுதிக ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்த ர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். இரவு புஷ்ப அலங்கா ரத்தில் சுவாமி திருவீதி யுலா நடந்தது. பின்னர் கொடி யிறக்கத்துடன் விடையாற்றி நடந்தது.

Related Stories: