காஞ்சிலிக்கொட்டாய் பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா தேரோட்டம்

அரியலூர், மார்ச் 22: காஞ்சலிக்கொட்டாய் பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள காஞ்சிலிக்கொட்டாய் அடியார்குடிமலையில் தண்டாயுதாணி கோயில் உள்ளது. இந்த மலையடி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை மண்டகபடி மற்றும் சுவாமி ஊர்வலம் நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் தேரோட்டம் நடந்தது. பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலையில் கோவிலை சுற்றி நிலைக்கு தேர் வந்தது. இதில் விளாங்குடி, ஒரத்தூர், முனியங்குறிச்சி, நாகமங்கலம், புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: