அதிமுகவிற்கு 3வது இடம் தான் திமுகவோடு தான் எங்களுக்கு நேரடி போட்டி

நெல்லை, மார்ச் 21:  நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் எங்களுக்கும், திமுகவுக்குமே நேரடி போட்டி என அமமுக வேட்பாளர் ஞானஅருள்மணி தெரிவித்தார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை வந்த அவருக்கு மாநகர மாவட்ட அமமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, காந்தி, காமராஜர், வ.உ.சிதம்பரனார், வீரன் அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன், அம்பேத்கர்,  உள்ளிட்ட சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி. அதிமுக 3வது இடத்தையே பிடிக்கும். நான் வெற்றி பெற்று எம்.பி.யானால் விவசாய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவேன். மக்களுக்காக நான், மக்களோடு நான் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மக்களோடு, இருந்து பணியாற்றுவேன்.

தலைமை எந்தத் தேதியில் அறிவிக்கிறதோ, அந்த தேதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்வேன். நாடு முழுவதுமே இப்போது மக்கள் போராடி வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி இல்லாததே இதற்கு காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், அவைத்தலைவர் ஜெகநாதன், அமைப்பு செயலாளர்கள் மைக்கேல் ராயப்பன், ஆர்.பி. ஆதித்தன், பகுதி செயலாளர்கள் அசன் ஜாபர் அலி, பேச்சிமுத்துபாண்டியன், எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணைச்செயலாளர் விகேபி சங்கர், ஜெ. பேரவை துணை செயலாளர் பரமசிவ ஐயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாளை ரமேஷ், களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமாரசாமி மணி, பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்டராஜன், இளைஞர் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் தாமோதரன், எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் கேடிசி சின்னப்பாண்டி, இலக்கிய அணி அவைத்தலைவர் ஆறுமுகம், அக்ரோ சேர்மன் சுப்ரீத் சுப்பிரமணியன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி காளிதாஸ் பாண்டியன், ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் உக்கிரபாண்டியன், பாலகம் அன்பு, செல்வசேகர், கஜேந்திரமணி, மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் வானமாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: