ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆதிக்கலை விழா

ஊட்டி, மார்ச் 20: தமிழகத்தின் பாரம்பரியமிக்க இசை கலைகள், நடனம் போன்றவைகள் படிப்படியாக அழிந்து வருகின்றன. எதிர்கால சந்ததியினரினருக்கு இதுபோன்ற கலைகள் இருப்பது தெரியாமல் போக கூடிய சூழலும் உள்ளது. ஒரு சில அமைப்புகள் பறையிசை போன்ற கலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊக்குவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம், மக்கள் சட்டம் ஆகிய சார்பில் சென்னை அறம் கலைக்குழுவினரின் ஆதிக்கலை விழா ஊட்டி அரசு கலை கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்து  துவக்கி வைத்தார். மலைச்சொல் அமைப்பாளர் பாலநந்தகுமார், மக்கள் சட்ட மைய இயக்குநர் வக்கீல் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அறம் கலை குழுவை சேர்ந்த கலைஞர்கள் பறையிசையை இசைத்த படியே நடனமாடி அசத்தினார்கள். மேலும் சிலம்பாட்டம், கயிறு சுற்றுதல் போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதை ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்த்து ரசித்தது மட்டுமின்றி நடனமாடியும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து வக்கீல் விஜயன் கூறுகையில், ‘தமிழகத்தின் ஆதிக்கலைகளில் ஒன்றான பறையிசையை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அறம் கலை குழு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் தொழில்முறை கலைஞர்கள் கிடையாது. அனைவரும் ஆசிரியர், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஆக உள்ளனர். தங்களிடம் உள்ள ஆர்வத்தினால் பறையிசை கற்று அனைவரிடமும் கொண்டு சேர்த்து வருகின்றனர்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், ேபராசிரியர்கள் உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.‘

Related Stories: