பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பூர்வமான தேர்தல் அறிவிப்பு டிஆர்ஓ வெளியிட்டார்

பெரம்பலூர்,மார்ச்20: பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகத்தில் சட்டப் பூர்வமான தேர்தல் அறிவிப்பை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி வெளியிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 7கட்டங்களாக பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டு ள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 10ம் தேதி மாலை இந்தியத் தேர்தல் ஆணை யர் வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமு லுக்கு வந்தன. இந்நிலையில் இந்த அறி விப்பு நேற்று சட்டப்பூ ர்வமாக பெரம்ப லூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டர் சாந்தாவால் அறி வித்துக் கையெழுத்திடப் பட்டது. இந்த அறிவிப்புகளை நேற்று பெரம்ப லூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி வெளியிட்டு, கலெக்டர் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டரின் நேர்மு க உதவியாளர் (பொது) ராஜராஜன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மனோகரன், தேர்தல்பிரிவு தாசி ல்தார் பாலசுப்ரமணியன், குன்னம் தாசி ல்தார் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: