கரூர் மாவட்டத்தில் \ மணல் தட்டுப்பாட்டால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

கரூர், மார்ச் 20: கரூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள் அருகே செங்கல் சூளைகள் அமைத்து செங்கல் உற்பத்தி செய்து வருகின்றனர். செங்கல் சூளைகளில் களிமண், செம்மண், சவுடு மணல் ஆகியவற்றை மூலப்பொருட்களாக பயன்படுத்தி செங்கல் தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த மூன்று மணலையும் கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. இதற்காக அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் சம்பளம் ஆகியவை காரணமாக செங்கல் உற்பத்தி செலவு அதிகமாகிறது. ஆனால் போதுமான விலை கிடைக்கவில்லை. பெரிய அளவிலான கட்டுமான பணிகள் மணல் பிரச்னையால் சுணக்கம் ஏற்படுகிறது. மாற்று மணலான எம் சேண்ட் உற்பத்திக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை. மேலும் வெளிநாட்டு இறக்குமதி மணலையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இப்பிரச்னை தீர்ந்தால் தான் செங்கல் உற்பத்தி தொழில் பழைய நிலைக்கு வரலாம். இப்பிரச்னைகளின் காரணமாக செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: