ஊட்டி, மார்ச் 19:ஊட்டியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா மலைசிகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிகரம் வரை சுமாா் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. தொட்டபெட்டா பகுதி நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது. தொட்டபெட்டா சிகரத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கோடை சீசன் சமயங்களில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1500 வாகனங்கள் தொட்டபெட்டாவிற்கு சென்று வருகின்றன. சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்கள் சென்று வர இடவசதியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சீசன் சமயங்களில் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாகிறது.
இதையடுத்து சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கிலும், தொட்டபெட்டா சிகரத்திற்கு வாகனங்கள் சென்று வருவதை குறைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.