அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுவை பெட்டியில் போட்ட முதியவர்

அரியலூர்,மார்ச்19: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும்   நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடம் புகார் மனுவை கலெக்டர் வாங்குவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்ததையடுத்து பொதுமக்களிடம் கலெக்டர் குறைதீர் முகாம் நடத்தக்கூடாது என்பதால்  கலெக்டர் அலுவலகத்தின் முன்பு  பொது மக்களிடம்  மனுவை பெறுவதற்கு பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் செய்திதாள்களில் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பொதுமக்களிடம் குறைதீர்க்கும் முகாம் நடைபெறாது என்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவை அதற்கென உள்ள பெட்டியில் போட வேண்டும் என்று செய்திவெளியிட்டனர், ஆனாலும் கிராம மக்கள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். இதனையடுத்து புகார் மனுவைபெறுதற்கு காவலர் பாதுகாப்புடன் புகார் மனு பெட்டி வைத்துள்ளனர்.

Related Stories: