பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி 25வது ஆண்டுவிழா

பெரம்பலூர்,மார்ச்19: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நி லைப் பள்ளியின் 25வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்திலுள்ள நியூ ஆடிட்டோரியத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் பிரேமலதா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி பேசுகையில், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர்களாகவும் திகழ வேண்டும். பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்க்கலாம். செல்லைக் கொடுத்து வளர்க்காதீர்கள்.

சமூக  அக்கரையோடு, சமூக த்தில் போராடி வெல்வதற்கான தன்னம்பிக்கையையும் மாணவ மாணவிய ருக்குக் கற்றுத்தர வேண்டும்  என்றார்.பின்னர் பள்ளியில் உடல்திறன், அறி வுத்திறன் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. விழாவில் கல்விக்குழும இயக்குநர் ராஜபூபதி, கல்விக்குழும முதன்மை நிர்வாக அதிகாரி நந்தகுமார், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நி லைப் பள்ளி முதல்வர் செல்வமணி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தமிழ்வழிக் கல்வி மேல்நிலைப் பள்ளி முதல்வர் கோவிந்தசாமி, ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப் பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

Related Stories: