குஜிலியம்பாறை அருகே கல்வி சீர்வரிசை வழங்கி கிராமத்தினர் அசத்தல்

குஜிலியம்பாறை, மார்ச் 19: குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கி கிராமமக்கள் அசத்தியுள்ளனர்.குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 43 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியை, 2 உதவி ஆசிரியர்கள் என 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இக்கிராம மக்கள் தங்கள் பங்களிப்புடன் இப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஸ்டீல் பிரோ, பிளாஸ்டிக் சேர், பிளாஸ்டிக் டிரம், சில்வர் குடம், பிளாஸ்டிக் குடம், டிவிடி பிளேயர், கடிகாரம், சில்வர், பிளாஸ்டிக் வாளிகள், கிரிக்கெட் பேட், பந்து, ஸ்கிப்பிங் கயிறு, டெனிகேட் பால் உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு வழங்கினர். முன்னதாக கிராமமக்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். இதில் வட்டார கல்வி அதிகாரி சந்தியா, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் பாக்கியலெட்சுமி, தலைமை ஆசிரியை செல்வகாந்தி, உதவி ஆசிரியர்கள் லீலா, ஜெயசீலன் மற்றும் ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: