தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு பணி துவக்கம்

ஊட்டி, மார்ச் 15: ஊட்டியில் உள்ள ேதனிலவு படகு இல்லம் ரூ.48 லட்சம் செலவில் சீரமைப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு தற்காலிகமாக படகு சவாரி ரத்து ெசய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி ஏரியின் மறு கரையில் புதிதாக ஒரு படகு இல்லம் அமைக்கப்பட்டது. ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த படகு இல்லம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனை சீரமைக்க சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் படகு இல்லம் சீரமைப்பு பணிக்காக   ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதன் மூலம் புதிய படகு இல்லத்தின் நடைபாதைகள், கூரைகள் மற்றும் படகு நிறுத்தும் தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தரை தளம் அனைத்தும் இரும்பு தகடுகளை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் துவக்கி ஓரிரு நாட்கள் ஆன நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories: