‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பறக்கும் படை, கண்காணிப்புக் குழுவினருக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பயிற்சி வகுப்பு

தேனி, மார்ச் 15: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலைக்கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று தேனியில் நடந்தது. தேனி நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தல், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை  ஏப்.18ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த 10ம் தேதி மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இவ்விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 3 பறக்கும்படை, 3 நிலைக்கண்காணிப்புக்குழு, 2  வீடியோ கண்காணிப்புக்குழு, 1 வீடியோ பார்வையாளர் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

 இதன்படி, தேனி மாவட்டத்தில் 13 பறக்கும் படைக்குழுக்கள், 12 நிலைக்கண்காணிப்புக்குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், 4 வீடியோ பார்வையாளர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து வருகிறது.

இக்குழுவில் உள்ள போலீசார், அரசுத் துறை அதிகாரிகள், வீடியோ கிராபர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரும், நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலருமான பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். டிஆர்ஓ கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி முன்னிலை வகித்தனர். இதில் பறக்கும்படை, நிலைக்கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்வையாளர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: