ஓமலூரில் விசிக மக்கள் சந்திப்பு கூட்டம்

ஓமலூர், மார்ச் 12: ஓமலூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் நல்லுசாமி தலைமையில் கருப்பனம்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஓமலூர் தொகுதி செயலாளர் தெய்வானை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி திமுக கூட்டணி கட்சிகள் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பின்னர் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினர்.

Related Stories: