காலமுறை ஊதியம் வழங்க கோரி சென்னையில் டாஸ்மாக் பணியாளர்கள் மறியல் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்

திருச்சி, மார்ச் 8: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துறைவாரி மானிய சட்டமன்ற கூட்டத்தொடரின்போது மறியலில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலுசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ராஜா, மாநில பொருளாளர் அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைவாரி மானிய சட்டமன்ற கூட்டத் தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்தவது, இதில் டாஸ்மாக்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்துவது, அடுத்த சட்டமன்ற தொடரின் போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது, விற்பனை கடைகளின் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணியாக குறைக்க அரசை வலியுறுத்துவது என்பது போன்ற 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரசு பணியாளர் சங்க முன்னாள் பொது செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

Related Stories: