திமுக சார்பில் அன்னதானம் வழங்கல்

பள்ளிபாளையம், மார்ச் 7: திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையத்தில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மூர்த்தி கொடியேற்றி அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குமார், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன், அவைத்தலைவர் குளோப்ஜான், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கிளை கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: