நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கதேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

திருத்துறைப்பூண்டி, மார்ச்7: நீதிமன்ற உத்தரவுபடி திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கனம் சேமிப்பு சங்க தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம்தேதி, 10ம்தேதிபரிசீலனை, 16ம்தேதி தேர்தல் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.இதில் தமிழகஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டனியை சேர்ந்த 11 பேரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டனியை சேர்ந்த 11 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர்.இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்திரவுபடி அதேநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மீண்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் 23 ந் தேதி வேட்பு மனுபரிசீலனைநடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரிவரவில்லை. இதனை கண்டித்து ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கனம் சேமிப்பு சங்கம் முன்பு தமிழகஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 1ம் தேதி நடைபெற்றது. 2ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியலில் தமிழக தொடக்கப்பள்ளி சார்பில் மனுதாக்கல் செய்த 11 பேரில் 4 பேர் மனுவை வாபஸ் பெற்றனர்.இதில் தமிழகஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 8 பேரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டனியை சேர்ந்த 7 பேரும் போட்டியிடுகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 204 வாக்குகளில் 194 வாக்குகள் பதிவாகியுள்ளது.வாக்கு எண்ணிக்கை இன்று(7ம்தேதி) தேதி நடைபெறுகிறது.

Related Stories: