கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து போஸ்டர்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, விண்ணப்ப கட்டணம் என அனைத்தும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தண்ணீர் வரி ரூ.480லிருந்து ரூ.1680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.100 ஆக இருந்த விண்ணப்ப கட்டணம் ரூ.1000மாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கொடைக்கானல் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறை மின்சாரம் பெற்ற மலைக்கிராமம் மலைப்பகுதிகளில் வாழும் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறுமலை அடுத்த தாழக்கடையில் சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ரூ.1.85 கோடியில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் விநியோகம் பெறவும் வசதி செய்யப்பட்டது.

இதன்மூலம் சுமார் 200 குடும்பங்கள் பயனடைகின்றனர். தவிர சிறுமலை புதூர் முதல் தென்மலை வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் 7.4 கிமீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து கொட்டப்பட்டி வழியாக கன்னிவாடிக்கு புதிய பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் லாரி பேட்டை அருகில் ரூ.60 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், அபிராமி குப்பம் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம், மேற்கு ரதவீதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.9 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் கமலா நேரு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.17.68 லட்சம் செலவில் நவீன ஆபரேஷன் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: