நாகையில் மகா சிவராத்திரி விழா

நாகை, மார்ச் 6:  நாகையில்  உள்ள சிவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு நவராத்திரி விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகை நீலாயுதாட்சி அம்மன் சமேத  காயாரோகண சுவாமி கோயில், வெளிப்பாளையம்   ஆனந்தவல்லி தாயார் கோயில், வீரபத்ர சுவாமி கோயில், அழகர்  கோயில், நடுவதீஸ்வரர் கோயில், குமரன் கோயில்,  அமிர்தகடேஸ்வரர் கோயில், மலையீஸ்வரன் கோயில்,  சட்டையப்பர் கோயில், நாகநாதர் சுவாமி கோயில்,  நந்தீஸ்வரர் கோயில், நாகூர் திருநாகவல்லி தாயார் சமேத ஸ்ரீ  நாகநாத சுவாமி கோயில் உள்ள 15 சிவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு  நவராத்திரி விழா நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில்  மஹா சிவராத்திரி உற்சவ விழா நேற்று  முன்தினம் காலை  விக்கனேஷ்வர பூஜை,

மஹா சங்கல்பத்துடன் நவசக்தி மஹா  யாகம் நடைபெற்றது. தொடர்ந்து  ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா  காட்சி நடைபெற்றது. நேற்று அட்சயலிங்க சுவாமி கோயில் இருந்து 108 பால்குட  வீதி உலா நடைபெற்று அம்மனுக்க பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பூம்புகார்: பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 4 கால பூஜைகள் செய்யப்பட்டது.  இதேபோல் பல்லவனம் பல்லவனேஸ்வரர் கோயில், சாயாவனம் சாயவனேஸ்வரர் கோயில், மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில், தருமகுளம் மன்மாதேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு ஆண்டியப்பன்காடு உடையாளீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது.  விழாவையொட்டி அங்குள்ள சிவனுக்கு நான்குகால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்னர்.  இதேபோல் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நான்குகால பூஜைகள் நடைபெற்றது.

Related Stories: