கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டா? ஆற்றில் இறங்கி அதிகாரி ஆய்வு

கொள்ளிடம், மார்ச்1: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுகிறதா என்று ஆற்றில் இறங்கி தஞ்சை வெண்ணாறு வடிநிலக்கோட்டசெயற்பொறியாளர் நேற்று ஆய்வு நடத்தினார்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி, கொன்னக்காட்டுபடுகை, சரஸ்வதிவிளாகம், பாலுரான்படுகை, வடரெங்கம், ஏத்தக்குடி, மேலவாடி ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள கிராமங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்று மணலில் தஞ்சை வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அசோகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு அனுமதியின்றி இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் எடுத்தால் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சீர்காழி உதவி செயற் பொறியாளார் ராஜேந்திரன், கொள்ளிடம் உதவிப் பொறியாளர் விவேகானந்தன், பாசன உதவியாளர்கள் பாலகிருஷ்ணன் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: