ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, பிப்.27: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மாணவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அப்போது மரக்கன்றுகளையும் நட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக, விழிப்புணர்வு பேரணி ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் நேற்று நடந்தது. பேரூராட்சி வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி நேரு பஜார், திருவள்ளூர் சாலை,  அண்ணாசிலை வழியாக சென்று ஆரணி ஆற்றாங்கரையை அடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி கையில் துணி பைகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.பேரணியின் போது ஆற்றங்கரை ஓரத்திலும், அம்பேத்கர் நகர், அண்ணாநகர் என 15  வார்டுகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர்  எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, துப்புரவு  மேற்பார்வையாளர் குமார், இளநிலை உதவியாளர் பங்கஜம், பேரூராட்சி ஊழியர்கள் வெங்கடேசன், முருகவேல், முனிசந்திர சேகர், குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: