சங்கடஹரசதுர்த்தி விழா சீர்காழி தீர்த்த வினாயகருக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி, பிப்.27: சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோயில் தெற்கு கோபுரவாசல் அருகே ருணம் தீர்த்த விநாயகர் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு 20ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி தொடக்க விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு கணபதி ஹோமம்  செய்யப்பட்டது. தொடர்ந்து வினாயகருக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகிய பொருட்களை கொண்டும், கடத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டு சிறப்பு

அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்கள், அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள்

சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: