வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறைந்தது நாட்டிற்கு தலைகுனிவு

காங்கயம்,பிப்.26:  தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயநாட்டில் இருந்து வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்து அதன்மூலம் அந்நிய செலாவணி ஈட்டுவதே இயற்கை நியதி.  இதற்கு மாறாக குறைந்த அளவே இந்தியாவில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆகி வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி 46 சதவீதம் அளவிற்கு குறைந்து போய் இருப்பதாக அதற்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதன்மையாக இருப்பது கலப்படமும், நாணயமின்மையுமே ஆகும். மத்திய, மாநில அரசுகள், ஆளுமையுடன் இருந்து இதைக் கட்டுப்படுத்தி இருந்தால் இந்த அளவிற்கு ஏற்றுமதி குறைந்திருக்காது. மாறாக கூடியிருக்கும்.  விவசாயத்தை தொடர்ந்து அரசுகள் புறக்கணித்து வருவதன் வெளிப்பாடு  ஏற்றுமதி குறைந்ததற்கு காரணமாகும். திட்டமிட்டு அரசுகள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் மட்டுமே ஏற்றுமதி கூடும். நாட்டை காலப்போக்கில் வல்லரசாக்கும். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.

Related Stories: