கரூர் தெரசா கார்னர் பகுதியில் சாக்கடை வடிகாலை சுற்றிலும் மண்டி கிடக்கும் ெசடிகொடிகள்

கரூர், பிப். 26: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியில் சாக்கடை வடிகாலில் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் வழியில் சாக்கடை வடிகால் உள்ளது. கருப்பக்கவுண்டன்புதூர், திருப்பதி நகர், ராமானூர் உட்பட பல்வேறு பகுதி கழிவுகள் அனைத்தும் இந்த சாக்கடை வழியாக செல்கிறது.

இந்நிலையில் தெரசா கார்னர் பகுதியின் வழியாக ராமானூர் நோக்கிச் செல்லும் சாக்கடை வடிகாலை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து கழிவுகள் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக துர்நாற்றம் ஏற்படுவதோடு, பல்வேறு சிரமங்களை இந்த பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனை அகலப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என பகுதி மக்கள் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை வடிகாலை சுற்றிலும் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சீரான முறையில் கழிவுகள் வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: