பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப். 21: பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய  பங்களிப்பை பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 18ம் தேதி தொடங்கி நேற்று (20ம்தேதி) வரை நடைபெற்றது. இதில் கடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சேகர், தனியார் போக்குவரத்து சங்கம் குருராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மூன்று நாள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: