நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, பிப்.20: சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு பிப். 19ம் தேதி போலீசாரால் வக்கீல்கள் தாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை கறுப்பு தினமாக  அனுசரித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை நீதிமன்றத்தில் வக்கீல்கள் நேற்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். மணிகண்டன், ரமேஷ், பழனி, அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் முருகன், அலெக்ஸ், சாமுவேல், கிருஷ்ணகுமார், மாரிமுத்து, நயினார், முத்துமாறன், சீத்தாகுற்றாலிங்கம், சுப்பிரமணியன், சுகுமார், பேராச்சி, கணேசன் உட்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: