ஊட்டி - கேத்தி சாலை சீரமைக்க பொதுமக்கள் ேகாரிக்கை

ஊட்டி, பிப். 20: ஊட்டியில் இருந்து கேத்தி பகுதிக்கு ெசல்லும் மாற்றுப்பாதை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள்  பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இச்சாலை ேகத்தி ேபரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழித்தடம் சுமார் 5 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. அதேசமயம் எல்லநள்ளி வழியாக சென்றால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் வர வேண்டியநிலை உள்ளது.

இதனால்,பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வேலிவியூ, கேத்தி மாற்று வழித்தடம் வழியாகவே ெசன்று வருகின்றனர். ஆனால், இச்சாலை தற்போது மிகவும் பழுதடைந்து சிறிய வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வேலிவியூ - கேத்தி பகுதியில் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: