தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை சப் கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் 600க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், மருத்து பயிற்சி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். தொழுநோய் விழிப்புணர்வு வாகனம் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழுநோய் அலுவலர்கள்  விளக்கினார்.இதில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி, நர்சிங் மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவருக்கும் சப் கலெக்டர் சரவணன்  தலைமையில் எடுத்து கொண்டனர்.சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஜீவா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், துணை இயக்குனர் கனிமொழி (தொழுநோய்), மலேரியா நல அலுவலர் பரணிகுமார், காஞ்சிபுரம்  வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: