கோவனூரில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், பிப். 15: கும்பகோணம் அடுத்த கோவனூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.

கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் அடுத்த கோவனூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதி, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புக்கான சான்றுகளுக்கான மனுக்களை உரிய  ஆவணங்களுடன் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: