முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்

ஊட்டி, பிப். 15:முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.

இதுகுறித்து முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் கூறியிருப்பதாவது: ‘‘முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இரட்டைப் பிரதிகளில் மனுக்கள் வாயிலாக தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவிக்கலாம்’’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: