சேரிங்கிராசில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஊட்டி, பிப். 15: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.   

 கோத்தகிரி, தும்மனட்டி, கப்பச்சி, கட்டபெட்டு, மைனலை, பேரார் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்ேவறு ேதவைகளுக்காக நாள் தோறும் ஊட்டி வந்து செல்கின்றனர். இவர்கள், மீண்டும் தங்களது கிராமங்களுக்கு செல்வதற்கு, மாலை நேரங்களில் சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்சிற்காக வெகு நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது. தற்போது இப்பகுதியில் நிழற்குடை மற்றும் பஸ் நிறுத்தம் இல்லாத நிலையில் பயணிகள் சாலையோரங்களிலேயே வெகு நேரம் காத்து நிற்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.  

மேலும், பயணிகள் நிற்கும் இடத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்திக் கொள்கின்றனர். மழை காலங்களில் ஒதுங்க இடமில்லாத நிலையில் ெபாதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நிழற்குடை அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ெபாதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: