அமித்ஷாவின் வருகை உத்வேகத்தை கொடுக்கிறது வானதி சீனிவாசன் பேட்டி

பவானி, பிப். 14: பாஜ., தலைவர் அமித்ஷாவின் வருகை கொங்கு மண்டலத்தில் உத்வேகத்தை கொடுக்கிறது என மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

இது குறித்து, பாஜ., மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டது. கொங்கு மண்டலத்தில் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேசிய தலைவர் அமித்ஷா வருகை முக்கியமாக கருதப்படுகிறது.

 கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேர்தல் பணியில் பாஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.  அமித்ஷாவின் வருகை இப்பகுதியில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. மதிமுக பொது செயலாளர் வைகோ, மதுரைக்கு பிரதமர் மோடி வரும்போது கருப்பு கொடி காட்டினார். திருப்பூருக்கு திட்டங்களை தொடக்கி வைக்க வந்தபோதும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வைகோ தனது கட்சியின் முடிவுரையை எழுதி வருகிறார்.  இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, காவிரி பிரச்னை என அனைத்து பிரச்னைகளையும் பாஜ., ஆட்சியில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த போது மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று உதவிகள், மீட்பு பணிகள் செய்தனர். மத்திய அரசு முதல்கட்ட நிதியை ஒதுக்கியதோடு, தேவையான உதவிகளை செய்துள்ளது. தமிழகத்தில் மிக பலமான வெற்றி கூட்டணி அமையும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Related Stories: