பிரேக் பழுதானதால் மலை மீது லாரி மோதி விபத்து

அந்தியூர், ஜன.8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் நஞ்சன் கோட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து அட்டை ரோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வசித்து வரும் இளங்கோ (54) என்பவர் ஒட்டிச் சென்றார்.

நேற்று மாலை 4 மணியளவில் பர்கூர் மலைப்பகுதி ரோட்டில் தட்டக்கரை பெரியமலை சுத்து பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, லாரியின் பிரேக் பழுதானதானது. இதனால், லாரி கட்டுப்பாட்டை இழந்து வளைவில் தறிகெட்டு ஓடி மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லேசான காயத்துடன் இளங்கோ உயிர் தப்பினார். தொடர்ந்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

 

 

Related Stories: