கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி வளர்ச்சித் திட்ட குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

கொள்ளிடம், பிப்.14: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான 42 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு கிராம பஞ்சாயத்துக் குழு வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர்களுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டகுழு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய ஆணையர் அன்பரசு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:

ஒவ்வொரு ஊராட்சியைச் சேர்ந்த கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட குழுவை சேர்ந்த 6 பேர் வீதம் 42 ஊராட்சியை சேர்ந்த 252 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். இவர்கள் ஊராட்சியின் வறுமை ஒழிப்பு குழுவின் அங்கத்தினர்களாக இருந்து சமூக வரைபடம், வளவரை படம், தயார் செய்து நடை பயணம் மேற்கொண்டு அடிப்படை தகவல்களை சேகரித்து 5 வருடத்திற்கான திட்டம் தயாரிக்கின்றனர். பின்னர் அதனை கிராம சபா கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு இதனை வளைதளத்தில் பதிவு செய்யப்பட்டு படிப்படியாக நிறைவேற்றி வைக்கப்படுகிறது என்றார். பயிற்றுநர்கள் செல்வம், விஜயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர்

கலந்து கொண்டனர்.

Related Stories: