இலவச திறன் பயிற்சிபெற நெல்லையில் நாளை ஆஜராக வேண்டும்

நெல்லை, பிப். 14:  நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம்  வீட்டு உபயோக பொருட்கள் பழுதுபார்த்தல், இருசக்கர வாகன பழுதுபார்த்தல், வெல்டிங், பிளம்பர், கணினி பயிற்சி, தையல் கலை  மற்றும் அழகு கலை உள்ளிட்ட பல பிரிவுகளில் இலவச திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இளைஞர்கள் விரும்பிய பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய விருப்பம் இருந்தால் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நாளை (15ம் ேததி) அன்று காலை 11 மணிக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இது திறன் பயிற்சிக்கான அழைப்பு மட்டுமே. இதற்கென பயணப்படி எதுவும் வழங்கப்படாது.

Advertising
Advertising

Related Stories: