செம்பனார்கோவில் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முற்றுகை

செம்பனார்கோவில், பிப்.13: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). வேன் டிரைவர். இவரும் ஆக்கூர், காமராஜபுரத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகள் கவுசல்யா(21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது கவுசல்யா கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் கயிற்றை அறுத்து கவுசல்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு கவுசல்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவுசல்யாவின் உடலை போட்டு விட்டு சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கவுசல்யாவின் உறவினர்கள் திரண்டு வந்து சாவில் மர்மம் இருப்பதாகவும், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்

டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செம்பனார்கோயில் போலீசார் விரைந்து வந்து பிரோத பரிசோதனை மற்றும் ஆர்டிஒ விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்று கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல அனுமதித்ததுடன், போராட்டத்தையும் கைவிட்டு

கலைந்து சென்றனர்.

கணவர் கைது

இந்நிலையில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், கவுசல்யா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Related Stories: