தாராசுரம் அரசலாற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஆர்டிஓவிடம் மக்கள் புகார்

கும்பகோணம், பிப்.12: கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்திலுள்ள அரசலாற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தாராசுரம் அரசலாற்றில் அருகில் மீன் விற்பனை செய்பவர்கள், மிஞ்சிய மீன் மற்றும் மீன் கழிவுகளை தினந்தோறும் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் குளிப்பவர்கள், கால்நடைகள், ஆற்றுநீரை பயன்படுத்தும்போது, பல்வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து தாராசுரம் பேரூராட்சி நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் பல முறை புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே அரசலாற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கலெக்டரிடம் புகாரளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: