இலவச வீட்டுமனை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை அரும்பாவூர் மக்கள் முற்றுகை

பெரம்பலூர்,பிப்.12: இலவச வீட்டுமனை வழங்க கோரி அரும்பாவூர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக் கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. பெரம் பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் தழுதாழை மெயின் ரோட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வீடற்ற மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்

தெரி வித்திருப்பதாவது :

     அரும்பாவூர் பேரூராட்சியில் மாவட்டத்திலேயே அதிகமான தாழ்த்தப்பட்ட மக் கள் வசித்து வருகின்றனர். ஏழ்மை காரணமாக ஒரே கூரைவீட்டில் 2, 3 குடும்ப ங்கள் கூட தங்கிக் கொண்டு படுக்க வசதியின்றி தெருக்களில் படுத்துத்தூங்கி வசித்து வரும் அவலம் உள்ளது.  பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கினால் அதில் குடிசை போட்டு வாழலாம் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு கலெக்டரிடமும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடமும் இருமுறை இலவச வீட்டுமனை வேண்டி மனுக்கொடுத்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும்

எடுக்கப்பட வில்லை.

இது எங்களது கோரிக்கையை அலட்சியப்படுத்தும் போக்கில் உள்ளது. இனியும் காலதாமதப் படுத்தாமல், அரும்பாவூரிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு வடபுற புன்செய் நிலத்தை கையகப்படுத்தி வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வீடற்ற ஏழைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டிய அவலநிலை தான் ஏற்படும்

என தெரிவித் திருந்தனர்.

Related Stories: