திமுக ஊராட்சி சபை கூட்டம் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இல்லை மாணவி புகார்

அரியலூர்,பிப்,7: அரியலூர் மாவட்டம், அரியலூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான ரெட்டிபாளையம், புதுப்பாளையம்,சிறுவளூர்,பொய்யூர் மற்றும் வைப்பம் ஆகிய கிராம ஊராட்சிகளில் திமுக சார்பில் கிராம ஊராட்சி சபை கூட்டங்கள் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.சிறுவளூர் கிராம ஊரட்சி சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கருப்பையன் அனைவரையும் வரவேற்றார். சிறுவளூருக்கு நகர பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்றும்,விளையாட்டு திடல் அமைத்து தரவேண்டும், பொது கழிப்பிடம் அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் வைத்தனர். புதுப்பாளையம் கிராம ஊராட்சி சபை கூட்டத்தில் சின்னையன் வரவேற்றார். முதியோர் உதவி தொகை, ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு, சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். பொய்யூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி செயலாளர் உத்திராபதி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் மருதையாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரவேண்டும். மகளிர் சுயஉதவிகளுக்கு முறையாக சுழல்நிதி கடன்கள் வழங்கபடவில்லை என குற்றச்சாட்டு. ஷோபனா என்ற மாணவி தங்கள் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்துவதற்க்கு ஆசிரியர் இல்லாத காரணத்தால் வரும் அரசு தேர்வுகளில் செய்முறை பயிற்சி செய்து எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை என கிராமசபை கூட்டத்தில் மாணவி ஷோபனா கதறல். இதனையடுத்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் மாணவியை சமாதானபடுத்தினார்.

Related Stories: