கரூரில் கலந்துரையாடல் கூட்டம் வாடிக்கையாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் பேச்சு

நெல்லை, பிப். 6: வாடிக்கையாளர் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கரூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராம

மூர்த்தி தெரிவித்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கோவை, திருச்சி, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட வாடிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் கரூரில் நடந்தது. வங்கியின் நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வங்கி தலைவர் அண்ணாமலை, உதவி தலைவர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தனர். திருச்சி மண்டல மேலாளர் நடராஜன் வரவேற்றார். இதில் பெருந்திரளாக பங்கேற்ற வாடிக்கையாளர்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைபாடுகளை

எடுத்துக் கூறினர்.

இவற்றுக்கு விளக்கத்துடன் பதிலளித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி பேசுகையில், ‘வாடிக்கையாளர்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். முழுமையாக நிவர்த்தி செய்யாவிட்டாலும் முடிந்தவரை நல்ல தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வட்டி விகிதத்தை பொருத்தமட்டில், ஒருசில கடன்களுக்கு வட்டி குறைவுதான். அதேசமயம் டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டியை

வங்கி வழங்குகிறது.

எனவே, வங்கி சேவையைப் பொருத்தமட்டில் அகில இந்திய அளவில் டி.எம்.பி. மட்டுமே முதலிடம் வகிக்கிறது. இதேபோல் சேவையைப் பொருத்தமட்டிலும் முதலிடம் டி.எம்.பி.க்குதான். குறிப்பாக கொல்கத்தா முதல் கன்னியாகுமரி வரை வங்கி சேவையில் முதலிடம் டி.எம்.பி.தான்.

மிக விரைவில் 100வது ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் டி.எம்.பி., ஆரம்பித்தது முதல் இன்று வரை லாபகரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தொடர் சேவை வங்கியில் உள்ளது. வங்கியின் வளர்ச்சிக்கு தேவை வாடிக்கையாளர்களின் ஆதரவுதான். வாடிக்கையாளர்களின் முழு ஆதரவு, ெபாதுமக்களின் பேராதரவுடன் டி.எம்.பி. மேலும் வளர்ந்து மக்களுக்கு சேவை புரியும். கரூர் மாநகரில் ஏற்றுமதி வர்த்தகம் மேலும் சிறப்படையவும், இங்கு மேலும் பல புதிய தொழில்கள் துவங்கிடவும் டி.எம்.பி. உதவிபுரிய

காத்திருக்கிறது’’ என்றார்.

கூட்டத்தில் வங்கி பொது மேலாளர்கள் செந்தில் ஆனந்தன், இன்பமணி, சூரியராஜ், மண்டல மேலாளர்கள் கோவை சுப்பிரமணியன், திருச்சி மேலாளர் நடராஜன், சேலம் சுரேந்திர பாலாஜி, வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: