கும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் 120 ஆண்டுகளுக்கு பிறகு மஹோதய சிறப்பு யாகம் நடந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கல் 2 கடைகளின் உரிமம் ரத்து

தஞ்சை, பிப். 5:  தஞ்சையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தஞ்சை அய்யங்கடை தெருவில் புகையிலை பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் 10 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று மாலை அப்பகுதி கடைகளில் சோதனை நடத்தினர்.

 இதில் 2 கடைகள் மற்றும் துணி குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ எடை கொண்ட புகையிலை மற்றும் 14 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். மேலும் புகையிலை பொருட்களை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் 2 கடைகளுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கு உணவு பாதுகாப்புத்துறை மூலம் வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: