வந்தவாசி, பிப்.2: வந்தவாசி அடுத்த தேசூர் போரூராட்சியில் அனுமதி இன்றி 10 வருடங்களாக குடிநீர் குழாய் இணைப்பு வைத்து இருந்தவர்களின் இணைப்பை நேற்று அதிகாரிகள் துண்டித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 12 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் 850 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளது. இதில் மழையூர் சாலையில் உள்ள மேல் நீர் தேக்க தொட்டி மட்டும் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள செய்யாற்றில் இருந்து பைப்லைன் மூலமாக தேசூர்-தெள்ளார் கூட்டு குடிநீர் திட்டத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் பிடிப்பத்தில் பொதுமக்கள் இடையே முக்கியத்துவம் இருக்கும்.இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுமதி இன்றி குடிநீர் குழாய் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பேருராட்சி உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் போளூர், புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.