மாநில கராத்தே போட்டி நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை

நாகை, ஜன. 30: நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி)  கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதலாமாண்டு பயின்று வரும் நவீன் என்ற மாணவர் மாநில அளவில் சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடந்த 4வது கராத்தே சாம்பியன்ஷிப் (2019)ல் பங்கேற்றார். இதில் 45 கிலோ எடை குமித்தே பிரிவில் முதல் பரிசையும், கத்தா பிரிவில் மூன்றாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளார். மாணவர் நவீனை கல்லூரி செயலாளர் செவாலியர் பரமேஸ்வரன் மற்றும் முதல்வர் ராமபாலன் ஆகியோர் பாராட்டினர். முதலாமாண்டு துறைத்தலைவர் தீபா மற்றும் உடற்கல்வி இயக்குனர் வேலவன் உடனிருந்தனர்.

Related Stories: