அரியலூர் பாலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா

அரியலூர்,ஜன.22: தைப்பூசத்தை முன்னிட்டு அரியலூர் நகரில் பெரம்பலூர் சாலையில் உள்ள  பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்தனர்.பால்குடம், அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை சென்றடைந்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மூலவர் பாலதண்டாயுதபாணிக்கும், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கும் உள்ளிட்ட 11வகையான திரவியங்களால் அபிஷேகம்நடைபெற்றது.இதனையடுத்து தண்டாயுதபாணி சுவாமிக்கு வெள்ளிக்காப்பு சாத்தப்பட்டு, வேல் மற்றும் சேவல்கொடியோடு மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றுதரிசனம் செய்தனர்.

Related Stories: