ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில்ரூ.20 கோடி மதிப்பில் கட்டிடப் பணி

ஜெயங்கொண்டம், ஜன.22: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகள் கொண்ட புதிய கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைப்பெற்றது.நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன்  புதிய கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் நீண்ட நாளையை கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கி புதிய கட்டிட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய் சிகிச்சை பிரிவுகள் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது என்றார்.நிகழ்ச்சியில் மருத்துவமனை  தலைமை மருத்துவர் உஷாசெந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் பிரேமலதா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: