புலவன்குடியிருப்பில் பொங்கல் விழா

நெல்லை, ஜன. 18: சேரன் மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பு காமராஜர் திடலில் ஊர் வாழ் நாடார் உறவின்முறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம், கால்பந்து, சைக்கிள்ரேஸ், கபடி, முறுக்கு கடித்தல், தண்ணீர் நிரப்புதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் புலவன் சுயம்புலிங்க நாடார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். சேரை ஒன்றியத் தலைவர் குமார், புலவன்குடியிருப்பு கிளைத் தலைவர் மயிலாடும்பெருமாள், கிளைச் செயலாளர் மனோகர், பொருளாளர் கணேசன், மாசிலாமணி நாடார், தேவதாஸ், ராஜமணி, ஸ்டீபன், விவேக், செல்வன், முத்துகிருஷ்ணன், முருகன், ஈசாக் மற்றும் ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: