புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி

ராதாபுரம், ஜன. 18: தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தேர்பவனி விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதிருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நவநாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை நற்கருணை ஆசீர் நடந்தது. மேலும் திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

9ம் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் புனித குழந்தை தெரசாள், புனித அன்னாள் தெரசாள் அன்பியங்கள் சிறப்பித்தனர். பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை ஜெரால்டு ரவி தலைமையில் நடந்தது.
Advertising
Advertising

இதில் கோட்டாறு இளையோர் இயக்குநர் ஜெனிபர் எடிசன் மறையுரை நிகழ்த்தினார். இரவில் ஆடம்பர தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இந்நிலையில் 10ம் திருவிழாவையொட்டி புனித அந்தோணியார், புனித செபஸ்தியார் அன்பியங்கள் நேற்று சிறப்பித்தனர். வள்ளியூர் பல்நோக்கு சங்க இயக்குநர் தந்தை அன்புச்செல்வன் தலைமையில் காலை திருவிழா திருப்பலி நடந்தது. மதியம் ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இரவு பனிமலர் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தெற்குகள்ளிகுளம் பேராலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் ஆலய நிர்வாகக் குழுவினர், திருத்தல தந்தை ஜான்சன் தலைமையில் இறைமக்கள்  செய்திருந்தனர்.

Related Stories: