தடையை மீறி மது பாட்டில் விற்பனை செய்த 6 பேர் கைது

கும்பகோணம், ஜன. 18: திருவள்ளுவர் தினத்தையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் டிஎஸ்பி செங்கமலக்கண்ணனுக்கு வந்தது.  அதன்பேரில் கும்பகோணம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), சந்தனாள்புரத்தில் டாஸ்மாக் மது விற்ற கருப்பூரை சேர்ந்த அஜித் (20), கொரநாட்டுக்கருப்பூர் சுடுகாட்டில் மது விற்பனை செய்த மணஞ்சேரியை சேர்ந்த காளிமுத்து (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் திருமலைராஜன் ஆற்றின் கரையோரத்தில் மது விற்ற தாராசுரத்தை சேர்ந்த பிரபு (எ) பிரபாகரன் (39), தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் கரையோரத்தில் மது விற்ற தாராசுரம் புளியந்தோப்பு ரவிக்குமார் (44), பெருமாண்டி மூனிஸ்வரன் கோயில் அருகில் மது விற்ற கார்த்தி (31) ஆகியோரை கும்பகோணம் தாலுகா மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Related Stories: