மனநல பயிற்சி முகாம்

பழநி, ஜன. 11: பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனநல பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பெங்களூருவைச் சேர்ந்த மனநல பயிற்சியாளரான ராஜேஸ் பெர்னாண்டோ பிளஸ்2 தேர்விற்கு தயாராகும் முறை, மன அழுத்தமில்லாமைக்கு மேற்கொள்ள வேண்டிய செயல்முறை, நினைவாற்றலை அதிகரிக்கும் முறை, கவனச்சிதறலை தவிர்க்கும் முறை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பெண் கல்வியின் அவசியம், நாட்டின் முன்னேற்றம், பெற்றோர், ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து குட்டிக்கதைகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டன. ஏற்பாடுகளை நெய்க்காரப்பட்டி அரிமா சங்க நிர்வாகி சுப்புராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: