கடலூர், ஜன. 9: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:தமிழ்நாடு மதுபான விற்பனை விதிகளின்படி வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 21ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று தினங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் எப்.எல்.2 எப்.எல்.3 மற்றும் எப்.எல்.3 ஓட்டல் பார்களில் மதுபானங்கள் ஏதும் விற்கப்படாமல் மூடியிருக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், ஓட்டல் பார், உரிமையாளர்கள் இந்த மூன்று தினங்களில் கடலூர் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.இதனை மீறி எவரேனும் மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ மற்றும் மது அருந்தும் கூடங்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் பார் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.